Breaking News

"கூட்டிக் கொடுக்குற சோசியல் மீடியா கும்பல்" - நடிகை நிலானி ஆவேசம்


சமூக வலைதள வாசிகள் சிலர் அவர்களது தாயையும், தங்கையையும் கூட்டி கொடுக்கும் அளவிற்கு படுகேவலமாக தன்னை பற்றி வதந்திகள் கிளப்பியதாக ஆவேசமுடன் பேசி இருக்கிறார் நடிகை நிலானி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டிற்கு எதிராக குரல் கொடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நிலானி. அதன் பின்னர் கைது நடவடிக்கை, முன்னாள் காதலன் தொடர் தொல்லை, இறுதியில் தற்கொலை என அவரது வாழ்வில் அடி மேல் அடி விழுந்தது.

குறிப்பாக முன்னாள் காதலன் காந்தி லலித் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நிலானி மீது படுமோசமான எதிர்மறை கருத்துக்களை தெரிவிக்க துவங்கினர்.

என்றாலும் தன் தரப்பு நியாயத்தை ஆதராத்துடன் நிரூபித்த நிலானி, தான் தற்பொழுது படும் கஷ்டங்கள் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அதில் சமூக வலைத்தளங்களில் பலர் அவரவர் இஷ்டத்திற்கு தன்னை பற்றி வதந்திகள் கிளப்ப துவங்கியதாகவும், அவர்கள் கூட்டி கொடுக்கவும் தயங்காத அளவுக்கு இழிவானவர்கள் என்றும் ஆவேசமாக பேசி இருந்தார்.