Wednesday, 24 October 2018

தாமதம் மேல் தாமதம் 'NGK' திரைப்படத்திற்கு வந்த சோதனை


நடிகர் சூர்யாவின் NGK திரைப்பட படப்பிடிப்புகளில் ஏற்பட்டு உள்ள  தாமதம்  ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் NGK. இதன் படப்பிடிப்புகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது.

ஆரம்பகட்டத்தில் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தாமதத்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று NGKவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது படக்குழு.

ஆனால் இயக்குனர் செல்வராகவனின் உடல் நலக்குறைவினால் படப்பிடிப்புகள் மேலும் தாமதமானதாலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் சரியாக வரவில்லை என மீண்டும் எடுக்க அவர் திட்டமிட்டு இருப்பதாலும் அத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது கூட சந்தேகம் தான் என கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();