Sunday, 28 October 2018

திருமணத்திற்கு பின்பு மீண்டும் கலக்க வரும் நமீதா..!


ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வாய் பிளக்க வைத்த கவர்ச்சி நடிகைககளில் ஒருவர் நமீதா. அனைத்து ரசிகர்களையும் இவர் மச்சான் என செல்லமாக அழைத்து சிலிர்க்க வைத்ததையும் நாம் மறந்திருக்க மாட்டோம்.

ஆனால் பிற நடிகைகள் போல சில ஆண்டுகள் கழித்து மார்கெட் இழந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விடிவு காலம் கிடைக்கும் என அதில் கலந்து கொண்டார். மாறாக அந்நிகழ்ச்சி இருந்த கொஞ்ச நஞ்ச ரசிகர்களையும் கலைத்துவிட, சினிமா போதும் என்ற முடிவோடு வீர் எனும் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சில மாதங்களாக கோலிவுட் பக்கம் தலையே காட்டாமல் இருந்து வந்த அவர், திருமணத்திற்கு பின்பு முதன் முறையாக டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தலைகாட்ட இருக்கிறார்.

கணவருடன் ஜோடியாக கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();