Breaking News

"இவரை போல ஒரு நாயகியை பார்த்ததில்லை" - தமன்னாவை புகழும் நந்திதா


ஒரு திரைப்படத்தில் இரு நடிகைகள் என்றாகி விட்டால், மேக் அப் துவங்கி காட்சிகள் வரை சிறு சிறு விசயங்களுக்கும் அடித்துக் கொள்ளும்  நாயகிகள் தான் திரைத்துறையில் அதிகம். இப்படி இருக்க நடிகை நந்திதாவோ சக நாயகி தமன்னாவை புகழ்ந்து பேசி வருகிறார்.

A.L விஜயின் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து வெளிவந்த திரைப்படம் தேவி. இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தற்பொழுது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதிலும் பிரபுதேவா, தமன்னா ஜோடி தொடர முக்கிய கதாப்பதிரத்தில் நடிக்கிறார் நந்திதா. இத்திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசி இருந்த நந்திதா, தேவி இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.

நடிகை தமன்னா எந்த வித ஈகோவும் இன்றி என்னுடன் பழகினார். இந்த திரைப்படத்தின் மூலம் எனக்கு நல்ல தோழி கிடைத்திருக்கிறார்' என மனம் திறந்திருந்தார்.