Breaking News

MeToo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் "ராகுல் டிராவிட்".... உண்மை முகத்தை வெளிக்கொண்டுவந்த வீடியோ


சினிமா பிரபலங்களின் மன்மத லீலைகளை MeToo இயக்கம் அம்பலப்படுத்தி வருகிறது. இதனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல சம்பந்தப்பட்டவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இப்படியொரு சூழ்நிலையில் எவருமே எதிர்பார்த்திராத கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயரும் இப்பொழுது அடிபட துவங்கியுள்ளது. ஆனால் கொஞ்சம் வித்யாசமாக அவரது கண்ணியத்தினை நிரூபிக்கும் விதத்தில்.

இது சம்பந்தமாக வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில், ஆங்கில பத்திரிக்கை நிரூபர் ஒருவர் பேட்டி எடுத்து முடித்த பின்னர், டிராவிட் உடன் தனிமையில் பேச துவங்குகிறார்.

பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறார். இதனை கண்டு பதறிப்போன ராகுல் டிராவிட், "உன் வயதென்ன? முதலில் படிப்பில் கவனம் செலுத்து" எனக் கூறி அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார். பின்பு அது ஒரு பிரான்க் என தெரியவந்ததும்தான் நிம்மதி பெருமூச்சி விடுகிறார். 

சிறிய கேப் கிடைத்தாலே சில்மிஷம் செய்யும் பிரபலங்கள் மத்தியில், ராகுல் டிராவிட் போன்ற பிரபலங்களும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் குறிப்பிட்ட காணொளியானது இணையதளவாசி ஒருவரால் பகிரப்பட்டு இருந்தது.