Wednesday, 10 October 2018

மனைவியை மகன் தாக்க வேடிக்கை பார்த்த மன்சூர் அலிகான் - காவல் நிலையத்தில் புகார்


நடிகர் மன்சூர் அலிகானின் மூன்றாவது மனைவி வஹிதா, இரண்டாவது மனைவியான ஹமீதவின் மகன் மற்றும் மகளால் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா துறையில் வில்லனாக மிரட்டி, தற்பொழுது அரசியலில் தனது அதிரடியான கருத்துக்களால் ஆளும் கட்சியை மிரட்டி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். இதனால் அவர் சிறை சென்ற சம்பவமும் நிகழ்ந்தேறியது.

என்றாலும் இது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை உயர்த்தி இருக்கும் இந்நிலையில், அவரது இந்த திடீர் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் வெளியாகி இருக்கிறது மனைவி தாக்கப்பட்ட சம்பவம்.

குடும்ப தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிய, மூன்றாவது மனைவி வஹிதா, இரண்டாவது மனைவியின் மகன் மீரான், மகள் லைலா ஆகியோரால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார்.

இந்த கைகலப்பின் போது அந்த இடத்தில் இருந்தாலும், வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்ததாக மன்சூர் அலிகான் மீதும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் வஹிதா.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();