Monday, 29 October 2018

தன் நற்செயலுக்கு கிடைத்த அங்கீகாரம்; அரசியலில் வலுவடையும் கமல்


நடிகர் கமலஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' எனும் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது சமூக வலைதள, தொலைகாட்சி அரசியல் ஒருபுறம் விமர்சனங்களுக்கு ஆளானாலும், ஒருபுறம் தனது முயற்சிகளால் தனக்கான கூட்டத்தை சேர்த்து கொண்டுதான் இருக்கிறார்.

மேலும் இவரது பொது நல செயலியான மய்யம் விசில், தனது அரசியல் கொள்கைகளையும் நாட்டில் நடக்கும் தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டு மக்களின் உபயோகத்திற்கு விடப்பட்டது.


இதன்வழியே பலதரப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி பதிவிட்டு வந்த நிலையில், அவற்றைப் பற்றி நடிகர் கமலஹாசனே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பி வந்தார். 

இப்படி வணிக நோக்கம் ஏதும் இன்றி, பொதுநலத்திற்கான ஒன்றாக மையம் விசில் செயல்பட்டதற்காக இந்தியாவின் சிறந்த செயலியாக அங்கீகரிக்கபட்டு பதக்கங்களும் வழக்கபட்டு இருக்கிறது.

கமல்ஹாசனின் இத்தகைய பொதுநல நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசியலில் அவர் மேலும் வலுவடைவார் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் பிரமுகர்கள். 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();