Breaking News

அறிமுக நாயகியிடம் சில்மிஷம்..! சிக்கிய விஜய் டிவி பிரபலம்


திரைத்துறையில் இருக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து நாயக, நாயகிகள் 'மீட்டூ' இயக்கத்தின் வாயிலாக பேசி வருகின்றனர். இதில் பல பெரிய கைகளின் பெயர் அடிபட்டிருக்கும் நிலையில், விஜய் டிவி பிரபலம் ஒருவரும் அந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்.

சமீபத்தில் 'மீட்டூ' விழிப்புணர்வுக்காக சங்கீதா பட் எனும் கன்னட நடிகை வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவில், "நானும் திரைத்துறையில் பல பாலியல் சீண்டல்களை சந்தித்து உள்ளேன்.  என் 15 வயதில் இயக்குனர் ஒருவர் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி காரில் அமர வைத்து சில்மிஷம் செய்தார்.

பிரபல தொலைக்காட்சி சேனலின் நகைச்சுவை நடிகர் ஒருவர், நான் நடித்த தமிழ் திரைப்பட ஷூட்டிங்கின் போது 'நீங்கள் அணிந்திருப்பது இந்த பிராண்ட் ப்ராவா..?' என மிகக் கொச்சையாக பேசினார்" என பதிவிட்டு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

இந்த பதிவில் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இருந்தபோதும் சங்கீதா பட் நடித்த ஒரே ஒரு தமிழ் படம், 'ஆரம்பமே அட்டகாசம்'  எனும் நிலையில், அவரிடம் கொச்சையாக பேசியது அதில் நாயகனாக நடித்த லொள்ளு சபா ஜீவாதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.