Breaking News

"சர்கார் இசை வெளியீட்டு விழா பேச்சு" கீர்த்தி சுரேஷை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்


தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னனி நாயகியாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில், தளபதி விஜயின் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரீலிசாக இருக்கிறது.

அதன் இசைவெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றிருந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் கீர்த்திசுரேஷ் பேசி இருந்தவை தமிழ் சினிமா ரசிகர்களால் பரவலாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

அதாவது, சர்கார் திரைப்பட நாயகன் "நடிகர் விஜய் உடைய தீவிர ரசிகை நான்" என நடிகை கீர்த்தி சுரேஷ் அந்நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இதே போல, நடிகர்கள் சூர்யா, விக்ரம், தனுஸ் என தான் நடிக்கும் அனைத்து திரைப்பட நாயகர்களின் ரசிகை எனவும் அவர் குறிப்பிட்டு வருவதை சுட்டி காட்டிய ரசிகர்கள், மீம்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.