Wednesday, 31 October 2018

"மாப்பிள்ளை அவருதான் அவர் சட்டை என்னுது" முருகதாஸை கலாய்க்கும் கஸ்த்தூரி


சர்கார் கதை திருட்டு விவகாரம் முடிவுக்கு வந்தது ஒரு புறம் மன நிறைவை தந்திருந்தாலும், இத்தனை நாட்கள் முருகதாஸ் அவர்களுக்கு ஆதரவு அளித்து சமூக வலைதளங்களில் பேசி வந்த விஜய் ரசிகர்களுக்கு, பெருத்த இடியானது மீம்ஸ்களாக அவர்களது தலையில் இறங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை நாட்கள் கதை தன்னுடையது என விடாப்பிடியாக இருந்து வந்த முருகதாஸ், வழக்கு கோர்ட் சென்றவுடன் சமரச முடிவு எடுத்திருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சமரச முடிவுக்கு பின்னரும் 'இருவரது கதைக் கரு ஒண்ணுதான், ஆனா கதை, திரைக்கதை, இயக்கம் நான் தான்' என அவர் பேசி வீடியோ வெளியிட்டிருப்பது, 'மாப்பிள்ளை அவர்தான், ஆனா அவர் போட்டிக்கும் சட்டை என்னுது' என படையப்பா பட காமெடி போல இருப்பதாக நடிகை கஸ்தூரி உட்பட பலதரப்பட்டவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இப்படி நாள் தோறும் பரபரப்பா பேசப்பட்டு வருவதால் சர்கார் படத்திற்கு வரலாறு காணாத விளம்பரமும், இதனால் சாதனை வசூலும் கிடைக்கலாம் என்றும் டிப்பரண்டாக யோசிக்கிறது மற்றோருதரப்பு.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();