Monday, 8 October 2018

"கருணாகரன் கொலை மிரட்டல்களுக்கு இவர்தான் காராணம்" - போட்டு கொடுத்த அஜித் ரசிகர்கள்


விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே ஒரு மினி உலகப் போரே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சினிமா பிரபலங்கள் யாரேனும் சிக்கி விட்டால் அவர்கள் கதி அதோகதிதான்.

இதனாலேயே பல பிரபலங்கள் விஜய், அஜித் குறித்த பதிவுகளை அதிக கவனத்துடன் இடுவது உண்டு. இப்படி இருக்க வெளிப்படையாக நடிகர் விஜய் குறித்து வெளிப்படையாக விமர்சித்து ரசிகர்களிடம் வசமாக சிக்கி இருக்கிறார் நடிகர் கருணாகரன்.

நடிகர் சங்க ஸ்ட்ரைக்கின் போதும், சர்கார் திரைப்பட படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் தடையின்றி நடந்ததை கண்டு கருணாகரன் கொந்தளித்தது முதல்,  அவரை விஜய் ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.

இதனால் பொறுமை இழந்த அவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கருணாகரன் சம்பந்தப்பட்ட மிரட்டல் பதிவுகளுக்கு காரணம் இவர்தான் என்று,  நபர் ஒருவரை குறிப்பிட்டு இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். 

அந்த நபர், நடிகர் விஜயை விமர்சித்து எழுதிய பத்திரிக்கையாளரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துவிட்டு, பின்னர் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து, மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();