Wednesday, 3 October 2018

மெகா ஹிட் ஹாலிவுட் படத்தில் பணியாற்றிய கமல்..! பல வருடங்களுக்கு பின் வெளியான தகவல்


உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் திரையுலகின் அடையாளமாக கருதப்படும் நடிகர்களில் ஒருவர். நடிப்பு, எழுத்து, இயக்கம், நடனம், தயாரிப்பு, இசை என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தனது காலடி தடத்தை பதித்த இவர், ஒப்பனை கலையை கற்றுக் கொள்ள ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் பணியாற்றியது குறித்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.

நேசனல் ஜியோகிராபிக் சேனலின், "மெஹா ஐகான்ஸ்" எனும் தொடருக்காக அண்மையில் பேட்டி அளித்திருந்த கமல் ஹாசன் அவர்களிடம், "கலைத்துறையில் தங்களுக்கு இருக்கும் இந்த திறமை உங்களுடன் பிறந்ததா இல்லை கற்றுக் கொண்டதா" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த போது அவர், "ஸ்டார் ட்ரெக்" எனும் மெகா ஹிட் ஹாலிவுட் திரைப்படத்தில், ஒப்பனையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ள, உலக புகழ் பெற்ற ஒப்பனையாளரான "மைக்கேல் வெஸ்ட்மோர்" என்பவரின் உதவியாளராக பணிபுரிந்த இதுவரை வெளிவராத தகவலை முதன் முறையாக தெரிவித்திருந்தார்.

    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();