Breaking News

தாடி பாலாஜியின் மகள் "போஷிகா"விற்கு உலகநாயகன் கொடுத்த சர்ப்ரைஸ்!!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்ட, தாடி பாலாஜியின் மகள் போஷிகாவிற்கு பரிசு ஒன்றினை அளித்திருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

காமெடி நடிகரும், சின்னத்திரை தொகுப்பாளருமான தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யாவுடன் மீண்டும் இணையவேண்டும் என்ற நோக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது இவர்களின் உரையாடலால், அதில் கலந்து கொள்ளாமலே நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டவராக, போட்டியாளர்களின் செல்ல பிள்ளையாக வலம்வந்தார் மகள் போஷிகா.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில், போட்டியாளர்களுக்கு தான் வைத்த பார்டியின் போது, விலையுயர்ந்த மொபைல் போன் ஒன்றை போஷிகாவிற்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த தகவலை நித்யா தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.