Breaking News

"தமிழ் மக்கள் வாழவைக்கிற தெய்வம்" விஜயால் மெய் சிலிர்த்த ஹர்பஜன்


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' அணியில் விளையாட துவங்கியது முதல், தமிழிலேயே தனது சமூக வலைதளப்பதிவுகளை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனால் இவரை 'குட்டி திருவள்ளவர்' என ரசிகர்கள் கிண்டலாக புகழும் அளவிற்கு தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள, 'நோட்டா' எனும் திரைப்பட ப்ரோமோசன் வீடியோவிலும் அவருடைய தமிழ் பதிவுகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த வீடியோவானது ஹர்பஜனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, தன் பாணியிலேயே "வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்" என தமிழில் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.