Breaking News

மீண்டுமொரு சமூக அக்கறை சப்ஜெட்டில் 'அறம் கோபி நயினார்'


நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி இருந்தவர் கோபி நயினார். அறம் திரைப்படம் நயன்தாரா உண்மையிலேய லேடி சூப்பர் ஸ்டார் தான் என ஒப்புக் கொள்ள வைத்ததுடன், கத்தி திரைப்பட கதை சர்ச்சையில் கோபி நயினார் பக்கம் இருந்த நியாயத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர உதவி புரிந்தது.

அந்த அளவிற்கு அப்படத்தில் இடம் பெற்றிருந்த சமூக அக்கறை கருத்தானது மக்களை கவர்ந்தது. இந்நிலையில் மீண்டுமொரு சமூகம் பேசும் திரைப்படத்தினை இயக்க இருக்கிறார் கோபி நயினார்.

ஆங்கிலேயர்களின் பிடியில் இந்தியா இருந்த போது, அதனை மீட்க புரட்சி செய்தவர்களுள் ஒருவர் பிர்சா முண்டா.வட இந்திய பகுதிகளில் நன்கு அறியப்பட்ட பிர்சா முண்டா அந்த போராட்டத்தில் தனது 25வது வயதிலேய மரணம் அடைந்தவர்.  இவரது வாழ்க்கை தான் கோபி நயினாரின் அடுத்த படத்தின் கதைக்கரு.


தற்பொழுது ஜெய் நடிக்கும் திரைப்படம் ஒன்றினை இயக்கிவரும் இவர், அந்த திரைப்படம் முடிந்த கையோடு, இந்த பிர்சா முண்டா சப்ஜெட்டை இயக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.