Breaking News

படப்பிடிப்பு பகுதியில் ''வெட்டு குத்து'' தலைதெறிக்க ஓடிய நாயகன்.. நாயகி..


இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் நடந்த மோதலால் படக்குழுவினர் தலைதெறிக்க ஓடிய சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

வசந்த பாலன் இயக்கத்தில்,  ஜி.வி.பிரகாஷ், எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதி நடிக்கும் திரைப்படம் ஜெயில். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை ஒட்டிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் சென்னை கண்ணகி நகர் பகுதியில், இத்திரைப்படத்தின் ஒருபகுதி படமாக்கப்பட்டது. அதேநேரத்தில் எவருமே எதிர்பாராத வகையில்  அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோத துவங்கியுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த இரு கோஷ்டியினர். 

இதனால் உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கின்றனர், நடிகர் ஜி.வி. பிரகாஷ், நடிகை அபர்னதி உள்ளிட்ட படக்குழுவினர்.