Breaking News

வைரமுத்து பெண்களை படுக்கைக்கு அழைத்ததில் என்ன தவறு..? இயக்குனர் சர்ச்சை பேச்சு


சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, பல திரைத்துறை பெண்கள் கவிஞர் வைரமுத்துவின் மேல் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும் போதிய ஆதாரங்களை சின்மயி சமர்பித்திடாததால், யாரை நம்புவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பொது மக்கள். மேலும் திரைத்துறையினர் பலரும் வைரமுத்து அவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து.



இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், அவர் ஒரு பெண்ணை தானே படுக்கைக்கு அழைத்தார்.அவர் ஆம்பளைதானே அப்படிதான் கூப்பிடுவார், உனக்கு இஷ்டம் இருந்தால் போ, இல்லையேல் அவர் மீது புகார் கொடு.

அவரும் ஆண் மகன் தானே அவருக்கும் உணர்வுகள் இருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் இந்த பிரச்சனையை மறந்து விடுவோம். அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெண்ணை தானே கூப்பிட்டார் அதில் என்ன தவறு, ஆம்பளையை அழைத்தால்தான் தவறு' என சர்ச்சை கருத்துக்களை அள்ளி வீசி இருக்கிறார்.