Breaking News

தனுஷுக்கு ஜோடி லட்சுமி மேனனா...? வதந்தி கிளப்பிய செய்திதாளுக்கு இயக்குனர் பதிலடி


திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் ராட்சஷன் படத்தை இயக்கிய ராம்குமார், தனது அடுத்த திரைப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இயக்குனர் ராம் குமார், ராட்சஷன் திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷை வைத்து மற்றொரு திரைப்படத்தினை இயக்க இருக்கிறார். அதன் திரைக்கதை எழுதும் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வருகிறது.

இந்நிலையில் பிரபல செய்தித்தாள் நிறுவனம், அந்த திரைப்படத்தில், தனுசிற்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இது குறித்து இயக்குனர் ராம்குமார், "ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்க்குள்ளாகவே கதை நாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்." என தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.