Breaking News

படப்பிடிப்பில் இவங்க அடிக்கிற லூட்டிய பாருங்க - 'தேவி-2 அலப்பறைகள்'


"தேவி-2" திரைப்பட படப்பிடிப்புகள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் என படுவேகமாக நடைபெற்று வருகிறது.

A.L. விஜயின் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா நடித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேவி. ஹாரர் காமெடி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வெற்றிப்படமாக வலம்வந்தது.

இதனால் தற்போதைய டிரெண்டான 'பார்ட் 2' சம்பிரதாயத்தை கையில் எடுத்த இந்த படக்குழு கடந்த செப்டம்பர் மாதம், 'தேவி 2' திரைப்படத்தை துவங்கி இருந்தனர்.

இம்முறை நடிகை கோவை சரளா, நந்திதா ஆகியோர் இணைந்துள்ள இந்த தேவி குடும்பம், படப்பிடிப்பு பகுதியில் அடிக்கும் லூட்டியை நடிகை தமன்னா சமீபத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

தேவி திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதத்தில் வெளியாகி இருந்த அந்த வீடியோவானது, ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.