Breaking News

சூப்பர் நடிகையின் இந்த காதலிலும் பிரச்சனையா..? சினிமா சீக்ரெட்


திரைத்துறையில் "ஆ.. ஊ..." என பலர் போற்றும் படி பெயர் எடுத்தவர் இந்த சூப்பர் நடிகை. அவரது நடிப்பும், அழகும் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்களும் ரசிகர்களையும், நடிகையை கொண்டாட வைக்க வேற லெவல் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.

இப்படி திரைக்கு பின்னால் இவருக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டமானது நிஜ வாழ்வில் கிடைத்துவிடவில்லை. எக்கச்சக்க சர்ச்சைகள், காதல் தோல்விகள் என மன உளைச்சலால் தொடர்ந்து தவித்து வந்தார்.

என்றாலும் தன்னை புரிந்து கொள்ளும் படியான காதலன் ஒருவழியாக கிடைத்து விட, சில வருடங்கள் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தார் நடிகை. 

ஒட்டுமொத்த திரையுலகும் வியக்கும் விதத்தில் வலம்வந்த இந்த ஜோடியின் மீது, யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்பொழுது முட்டி மோதிக் கொண்டு நிற்கிறார்களாம்.   

இதுவரை தன்னையே சுற்றி வந்த காதலின் பார்வை வேறொரு பெண்ணின் பக்கம் திரும்பியதே இந்த சண்டைக்கு காரணம் என்றும் கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.