Wednesday, 31 October 2018

"என் கட்சியில் உனக்கு இடம் இல்லை" சர்ச்சை நாயகியை கழட்டிவிட்ட நடிகர்


திரையுலகில் அசைக்கமுடியாத நட்சத்திரமாக இருந்து அரசியல் உலகிலும் கலக்க முடிவு செய்திருக்கும் உச்ச நட்சத்திரம் இந்த நடிகர்.

'இவரது கட்சியில் ரசிகனுக்கே இடம் இல்லை எனும் நிலையில், வெட்டிப் பேச்சு நாயகிக்கு மட்டும் இடம் கொடுத்து விடுவாரா..?' என திரைத்துறையினரை பேச வைத்திருக்கிறது சமீபத்திய சம்பவம் ஒன்று.

குறிப்பிட்ட நாயகியோ சர்ச்சைகளுக்கு பெயர் போனவர், வேலியில் போகும் ஒனாணனை வேட்டிக்குள் விட்டுக் கொள்வது போல, நாட்டில் என்ன சம்பவம் நடந்தாலும் அது பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்து வாங்கிக் கட்டிக் கொள்வது இவரது வழக்கம்.

இப்படி இருக்க உச்ச நட்சத்திரம் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் இடம் கேட்டு முன்னதாகவே துண்டு போட்டு வைக்க முயற்சி செய்திருக்கிறார் நடிகை. எது பேசினாலும் பிரச்சனையாகி விடுகிறதே என பேசவே தயங்கும் ஒருவரான அந்த நடிகர், "வி வில் கால் யு பேக்" என நேர்காணல் வருபவர்களை சூட்சகமாக நிராகரிக்கும் 'HR'களின் பாணியில், கட்சியில் இடம் இல்லை என கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனால் நடிகரை மலைபோல நம்பி இருந்த நாயகியோ, சமூக வலைதள அரசியல்வாதி ஒருவரது கட்சியில் துண்டு போட ஏமாற்றத்துடன் சென்றுவிட்டார்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();