Breaking News

ஓவர் சீன் உடம்புக்கு ஆவாதும்மா..! நாயகியை அடக்கிய நாயகன்கள்...!


படப்பிடிப்பில் சீன் போட்ட நாயகியை, தானாக தங்கள் வழிக்கு வர வைத்திருக்கின்றனர், தமிழ் திரைப்பட நாயகர்கள் சிலர்.

குறிப்பிட்ட வாரிசு நடிகை, தற்பொழுது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து நிற்பவர். அழகில் சுமார் தான் என்றாலும், நடிப்பில் பின்னி எடுத்துவிடும் அம்மணி படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்புடன் வருவது வழக்கம்.

அது எப்படிபட்ட பாதுகாப்பு என்றால், முன்னணி கதாநாயகர்கள் கூட அவரை நெருங்க முடியாதாம். இதனால் கடுப்பான நாயகர்கள் சிலர், தங்களது படங்களில் அம்மணிக்கு வாய்ப்பு வழங்க கூடாது என முடிவெடுக்க, இதனை கேள்வி பட்ட நாயகியோ சுதாரித்துக் கொண்டுள்ளார்.

இதனால், படப்பிடிப்பில் சிறிய கேப் கிடைத்தாலும், கேரவனில் நடிகர்களிடம் கடலை போட போய்விடுகிறாராம் இந்த வாரிசு நடிகை.