Tuesday, 16 October 2018

சின்மயி பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி..! வைரமுத்து மேல் நடிகர் சங்கம் நடவடிக்கை..?


பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்துவின் மேல் பாலியல் குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து, பல திரைத்துறையை சார்ந்த, சாராத பெண்களும் அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் வைரமுத்து அவர்களுக்கு பல தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், ஒரு தரப்பினர் ஆதரவும் அளித்து வருகிறார்கள். அதிலும், இப்படியொரு சம்பவம் நடந்த 15 வருடங்கள் கழித்து சின்மயி பேசி இருப்பது வைரமுத்து அவர்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே என்ற குற்றச்சாட்டும் சின்மயி மேல் வைக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இது குறித்து 'சண்டகோழி 2' பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருந்த விஷால், 'சின்மயி தனக்கு நடந்த ஒன்று இனி எவருக்கும் நடந்து விட கூடாது என்ற விழிப்புணர்வுக்காக இந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். 

அவர் கூறியது ஒன்றும் தவறல்ல ஆனால் அதை இத்தனை வருடங்கள் கழித்து கூறி இருப்பதுதான் பிரச்சனை. அவர் உடனடியாக கூறி இருந்தால் நடிக சங்கம் சார்பில் கண்டிப்பாக முடிந்த ஆதரவு அளித்திருப்பார்கள்.

உதாரணமாக அமலாபால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது, அவர் உடனடியாக எங்களுக்கு அறிவித்து விட்டார். நாங்களும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க உதவி புரிந்தோம். இதே போல சின்மயியும் உடனேயே பேசி இருந்தால் அவருக்கு உதவி கிட்டி இருக்கும்.

ஒருவேளை வைரமுத்து அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் சட்டப்படி நிரூபிக்க படுமாயின், நடிகர் சங்க சார்பிலும் அவருக்கு தடை விதிக்கபடும்' என்றிருந்தார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();