'சர்கார், பேட்ட'யை தொடர்ந்து சன்டிவி கைப்பற்றிய மற்றொரு பிரமாண்ட திரைப்படம்
சன் நிறுவனம் சர்க்கார், பேட்ட ஆகிய மெகா திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதன் சாட்டிலைட் உரிமமும் இந்நிறுவனத்தின் சன் டிவிக்குதான் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு மெகா ஹிட் திரைப்படம் ஒன்றையும் அந்த சேனல் கைப்பற்றியுள்ளது.
விஸ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மூன்றாவது வாரம் தொட்டு சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் ராட்சசன்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகி இறுதி வரை ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்த இந்த மாபெரும் வெற்றி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றியுள்ளது சன் நிறுவனம்.
மேலும் இத்திரைப்படமானது விரைவில் சன் நிறுவன செயலியான, சன் நெக்ஸ்டில் வெளியாகலாம் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.