Wednesday, 31 October 2018

சர்கார் சமரசத்தின் பின்னால் பல லட்சங்கள்..! விலை பேசப்பட்டாரா வருண்..?


சர்கார் கதை திருட்டு விவகாரம் சமரசத்தில் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனுக்கு, சர்கார் தரப்பிலிருந்து பல லட்சங்கள் வழங்கப்பட்டதாக ஒரு தகவலானது கோலிவுட் வட்டாரங்களில் கசிய துவங்கியுள்ளது. 

சர்கார், திரைப்பட கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்து வழக்கம் போல நடிகர் விஜய் படம் குறித்து பரபரப்பாக பேச வைத்தார் உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன்.

இந்த குற்றச்சாட்டிற்கு 'திருட்டுப் பட்டம் வாங்க ஒன்றும் என் அம்மா என்னை பெத்து விடவில்லை. எதையும் சட்டப்படி சந்திக்க தான் தயார்' என வீர வசனங்களோடு பதில் அளித்திருந்தார் முருகதாஸ்.

இவ்வளவு உறுதியாக இருந்த முருகதாஸ், திடீரென சமரசம் செய்து கொள்வதாக அறிவித்ததற்கு, படத்தின் ப்ரீ பிஸ்னஸ் ஒரு காரணம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.


இந்த பிரச்சனையினை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து இருந்தால், விரைவில் தீர்வு கிடைத்திருக்காது. அதனால் படத்தினை வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர்கள் மீதி தொகையை செலுத்துவதில் தயக்கம் காட்டுவர்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவே சமரச முடிவிற்கு முருகதாஸை தள்ளி இருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

மேலும் 30 லட்சமும், படத்தில் தனக்கான கிரெடிட்டையும் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த வருணுக்கு, அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்ததை தொடர்ந்தே, வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது எனவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();