Breaking News

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சர்கார் திரைப்பட காணொளி..! வெளியான முக்கிய தகவல்


A.R முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் அதிரடி திரைப்படம் 'சர்கார்'.

சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் தணிக்கை குழு முடிவு வெளிவந்திருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதியை உறுதி படுத்தும் விதத்தில் குறும் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறது அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

முன்னதாக சர்கார் திரைப்படம் நவம்பர் 2 அல்லது நவம்பர் 6 தேதியில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியாகியுள்ள குறிப்பிட்ட வீடியோவின் மூலம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 6ம் தேதி அத்திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.