Breaking News

தளபதி விஜயையே போன் போட்டு பாராட்ட வைத்த இளம் நடிகர்


நடிகர் விஜய், தமிழ் திரையுலகில் வெளிவரும் அற்புதமான திரைப்படங்களையும் அதன் நடிக, நடிகைகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக தனது பாராட்டுகளை தெரிவிக்கும் இயல்புடையவர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜயின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் இளம் நடிகர் ஒருவர்.

மத யானை கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் கதிர், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் "பரியேரும் பெருமாள்".


இந்த திரைப்படம் ரசிகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை பலரது பாராட்டுக்களையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றி குறித்து கேள்விப் பட்ட தளபதி விஜய், நடிகர் கதிரை போனில் தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

அப்பொழுது, தனது வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் விஜய், "சினிமா துறை முழுவதும் உங்க பேச்சாத்தான் இருக்கு" என்று குறிப்பிட்டதாகவும் நடிகர் கதிர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.