Friday, 5 October 2018

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி


நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், கடந்த செப்டம்பர் 30ம் தேதி முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றினை அளித்திருக்கிறார் அதன் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன்.

இது குறித்து நடிகர் மஹத் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவின் மூலம், அந்த இன்ப அதிர்ச்சியானது ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிரமாண்டமான விருந்து என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட விருந்தில், யாஷிகா ஆனந்த், மும்தாஜ், ஐஸ்வர்யா, மமதி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோரை தவிர அனைத்து இரண்டாவது சீசன் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களுக்கு கூட நடிகர் கமல் ஹாசன் விருந்து வைத்திராத நிலையில், இரண்டாவது சீசன் போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது அவர்களுக்கு மிகபெரும் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();