Breaking News

பிக்பாஸ் பரிசு தொகையை இதற்காக செலவிட போகிறேன் - பிரபலத்தின் முடிவால் கொண்டாடும் ரசிகர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இவற்றுள் தமிழ் பதிப்பு சொதப்ப,  தெலுங்கு பதிப்போ சென்ற சீசனை விட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் கௌசல் எனும் நடிகர் வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். சொல்லப்போனால் அவருக்கு வாக்களிக்கும் படி ரசிகர்கள் பிரச்சாரம் செய்த வினோத சம்பவங்களும் அங்கே நிகழ்ந்தேறியது.

இப்படி, தான் கனவிலும் எதிர்பார்த்திடாத அன்பை ரசிகர்களிடம் பெற்ற கௌசல், தான் வென்ற பரிசு தொகையில் ஒரு பகுதியை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ இருப்பதாக தெரிவித்து ரசிகர்களை மேலும் பிரமிக்க வைத்திருக்கிறார்.

இந்த முடிவின் காரணமாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட தன் அன்னைக்கு சரியான நேரத்தில் உதவ முடியாமல் போனதை வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டார்.