Monday, 1 October 2018

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் விஜய் சொன்னது என்ன..? பிரபலம் வெளியிட்ட தகவல்


இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், சின்னத்திரை ரசிகர்களிடையே பேராதரவை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசன் சென்ற வருடம் தமிழகத்தில் ஒளிபரப்பட்டு பல சினிமா பிரபலங்கள் இழந்த மார்கெட்டை மீண்டும் பிடித்தனர்.

இதனால் பல்வேறு சினிமா பிரபலங்களும் போட்டி போட்டு அதன் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டனர். இப்படி இருக்க தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் அந்நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதன்படி முதல் சீசன் போட்டியாளரான வையாபுரி சர்கார் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயை சந்தித்தாகவும், அப்பொழுது பிக்பாஸ் குறித்த பேச்சு எழ, 'தானும் தன் குழந்தைகள் பார்க்கும் போது அந்நிகழ்ச்சியை பார்ப்பேன்' என்று அவர் தெரிவித்ததாக வையாபுரி குறிப்பிட்டிருந்தார்.       
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();