Sunday, 28 October 2018

"சர்கார்" டீமிற்கு பாக்யராஜ் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் - அதிர்ந்த திரையுலகம்


சர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் நிலையில், விடாப்பிடியாக இருக்கும் இயக்குனர் முருகதாஸ் மற்றும் சர்கார் படக்குழுவினரை அதிர வைத்துள்ளது,  தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜின் சமீபத்திய நடவடிக்கை.

முன்னதாக உதவி இயக்குனர் வருண் என்பவர், சர்கார் படத்தின் கதை தனது செங்கோல் திரைப்படத்தின் கதைதான் என அறிவித்த புகாரை தொடர்ந்து, அப்படத்தின் கதை எழுத்தாளராக வருணுக்கு முறையான கிரெடிட் வழங்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் பாக்யராஜ். 

இதற்கு மறுப்பு தெரிவித்த A.R. முருகதாஸ், விடாப்பிடியாக 'இது என் கதைதான், எதையும் சட்டப்படி சந்திக்க நான் தயார். பாக்யராஜ், படத்தின் கதை கருவை மட்டும் ஒப்பிட்டு இப்படியொரு முடிவை கூறி இருப்பது சரி அல்ல. அவர் முதலில் முழு கதையையும் படிக்கவேவில்லை' என நேர்காணல்களில் பேசி இருந்தார்.


முருகதாஸின் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து, பாக்யராஜிடமும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப, சர்கார் திரைப்பட முழு கதையையும் வெளிப்படையாக கூறி, அப்படக்குழுவினரை கதி கலங்க செய்திருக்கிறார்.

 ஒரு எழுத்தாளர் சங்க தலைவராக, பாக்யராஜின் இந்த பொறுப்பற்ற செயலானது தற்பொழுது திரையுலகில் மாபெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();