Breaking News

விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்... அஜித் செய்த நெகிழ்ச்சியான காரியம்


நடிகர் அஜித், விஜய் போன்றவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிக தீவிர ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களை நேரில் பார்க்கும்வாய்ப்புக்காக எத்தகையை எல்லைக்கும் செல்லும் அவர்களது அன்புத்தொல்லை, இவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே கிடைத்து வருகிறது.

என்ன இருந்தாலும் ரசிகர்களிடம் முகம் கோணாமல் நடந்து கொள்ளும் ஒவ்வொரு நடிகரின் குணமும் அழகுதான். இப்படியொரு விசயத்தை தான் இன்று கண்கூடாக பார்த்திருக்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள் சிலர்.

சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படமான விஸ்வாசத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் இருக்கும் டப்பிங் தியேட்டர் ஒன்றில் நேற்று பூஜையுடன் துவங்கியது.

இதனை அறிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் சிலர், அவரை பார்பதற்காக டப்பிங் தியேட்டரின் வாசலில் இரவு 9 மணிமுதல் விடிய விடிய காத்துக் கிடந்திருக்கிறார்கள்.

பணிகள் முடிந்து நடிகர் அஜித் அதிகாலை 5 மணிக்கு காரில் கிளம்பி விட, சிறிது தூரம் ஓடிவந்த ரசிகர்களை பார்த்த அஜித், காரை நிறுத்த சொல்லி ரசிகர்களின் வேண்டுதலின் படி புகைப்படம் எடுத்துகொண்டிருக்கிறார்.

கூடவே பத்திரமா வீட்டிற்கு செல்லுங்கள் என்ற கனிவான அறிவுரையும் வழங்கினாராம் அஜித்.