Sunday, 28 October 2018

ஊனமுற்ற ரசிகருக்காக அஜித் செய்த காரியம் ; கொண்டாடும் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு உள்ள ரசிகர்களும், அவர்களது அன்பும் கணக்கிட முடியாதவை. அவர்களுள் வாழ்வில் ஒருமுறையாவது தங்களின் ரோல்மாடலாக விளங்கும் அந்த நடிகரை பார்த்து விட மாட்டோமா என ஏங்கும் ரசிகர்கள் தான் இங்கு எராளம்.

அவர்களை பார்க்கும் சிறு வாய்ப்பு கிடைத்துவிட்டால் இரவு, பகல் பாராது காத்திருந்து நடிகர்களையே மெய் சிலிர்க்க வைத்து விடும் ரசிகர்களையும் இப்பொழுது நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு பகுதியில் தன்னை பார்க்க காத்திருந்த ஊனமுற்ற ரசிகருக்கு தல அஜித் செய்த காரியம் பற்றி தற்சமயம் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பவத்தின் போது, கூட்டத்தோடு கூட்டமாக புகைப்படம் எடுக்க காத்திருந்த குறிப்பிட்ட ரசிகரின் வீல் சேரை தானே தள்ளி வந்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் வருகிறீர்கள் என அவர் பேசிய கனிவான வார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்ட இளைஞர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். 

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();