Breaking News

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வந்ததும் ஐஸ்வர்யா செய்த காரியம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை முடிவுக்கு வந்தது. அதில் நடிகை ரித்விக்கா பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றியாளராக அறிவிக்கபட்டார்.

அவருக்கு எதிராக பலம் வாய்ந்த போட்டியாளராக வலம்வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவுக்கு நல்ல ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கையோடு தான் வீட்டில் குத்தாட்டம் போடும் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த 100 நாட்களாக இணையம், மொபைல் போன், பிடித்த சாப்பாடு போன்றவற்றை தியாகம் செய்து விட்டு இருந்த நிலையில், இனிமேல்  நினைத்ததை  செய்யலாம் என்ற ஐஸ்வர்யாவின் மகிழ்ச்சியினை அந்த  காணொளியில் கண்கூடாக பார்க்க முடிந்தது.