Monday, 29 October 2018

சின்மயியை தொடர்ந்து, பல மன்மத லீலைகளை வெளியிடப் போகும் நடன இயக்குனர்


சின்மயி வைரமுத்துவின் மீதான பாலியல் குற்றச்சாட்டின் மூலம், "MeToo"  இயக்கத்தை தமிழகத்தில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்களின் சபலம் நிறைந்த மறுபக்கம் வெளிவந்தது.

என்றாலும் பல வருடங்கள் கழித்து இந்த குற்றச்சாட்டை வைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்ததன் காரணமாக, சின்மயிக்கான ஆதரவு மக்களிடம் படிப்படியாக குறைய துவங்கியது.

இதனால் "MeToo" இயக்கம் வாயிலாக தொடர்து பேசுவதை தவிர்த்து விட்டார் சின்மயி. இதன் காரணமாக கோலிவுட்டில் மீண்டும் அமைதி நிலவ துவங்கியிருக்கும் நிலையில், மீண்டும் அண்டாவை உருட்ட துவங்கி இருக்கிறார் நடன இயக்குனர் ஒருவர்.

இதுகுறித்து நடன இயக்குனர் ஷெரிஃப் என்பவர், வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு ஒன்றில், 'திரைத்துறையில் பல பெண்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த தகவல்களை வெளியிட இருக்கிறேன். மாலை ஆறுமணி வரை காத்திருங்கள்' என குறிப்பிட்டு இருக்கிறார்.


இதனால் யார் யார் தலை உருல போகிறது, என்ற பீதியானது திரையுலகில் இப்பொழுதே தொற்றிக் கொள்ள துவங்கிவிட்டது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();