Friday, 5 October 2018

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான விஸ்வாசம் அப்டேட் - ரசிகர்கள் ஏமாற்றம்


நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீடு உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது சத்ய ஜோதி நிறுவனம்.

சிவாவின் இயக்கத்தில் தல அஜித் தொடர்ச்சியாக நான்காவது முறை நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தவிர எந்த ஒரு அதிகாரப்பூர்வ  தகவலும் இதுவரை வெளிவந்திராத நிலையில், அத்திரைப்படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாக இருக்கும் செய்தியானது சமூக வலைதளங்களை ஆட்டிப் படைக்க துவங்கியது.

அதன்படி விஸ்வாசம் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும்  உரிமையினை "KJR ஸ்டூடியோஸ்" நிறுவனம் பெற்றிருக்கும் தகவல் தயாரிப்பு நிறுவனத்தால் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது, தல அஜித் பற்றிய தகவலாக இல்லாததால், ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றாக அமையவில்லை. என்றாலும் "அட்லீஸ்ட் இதையாவது சொன்னார்களே" என மனதை தேத்திக் கொள்ள வைத்திருக்கிறது.

   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();