Breaking News

'சர்க்கார்' கதையும் இவரோடது இல்லையா...? புதிய சிக்கலில் A.R. முருகதாஸ்


பாலிவுட், கோலிவுட் என மிகப் பிரபலமான இயக்குனரான A.R. முருகதாஸ் கதை திருட்டு பிரச்சனைகளில் தொடர்ந்து சிக்கி தவித்து வருகிறார்.

நடிகர் விஜயை வைத்து அவர் இயக்கி இருந்த கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என, அப்பட ரிலீசுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் இயக்குனர் கோபி நயினார்.

அப்பொழுது அவர் புதுமுக இயக்குனர் எனும் காரணத்தினாலோ என்னமோ, அவரது சொல் திரைத்துறையில் எடுபடவில்லை. ஆனால் அறம் திரைப்படம் வெளியான பிறகு, கோபி நயினார் அவர்களை விமர்சித்தவர்கள் கூட இயக்குனர்  A.R. முருகதாஸ் அவர்களை விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு கதை திருட்டு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் A.R. முருகதாஸ். அதாவது நடிகர் விஜயை வைத்து அவர் இயக்கி இருக்கும் சர்க்கார் திரைப்பட கதை தன்னுடையது என்றும் அதனால் அதற்கான கிரெடிட்டும், சம்பளமும் தனக்கு வர வேண்டும் என்றும் உதவி இயக்குனர் ஒருவர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.

குறிப்பிட்ட உதவி இயக்குனர், நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான S.A சந்திரசேகரின் கீழ் உதவி இயக்குனராக பணி புரிந்தவராம். மேலும் முறைப்படி அந்த கதையை தான் பதிவு செய்த ஆதராத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறாராம் அவர்.

இது குறித்து இயக்குனர் முருகதாஸ் இடம் எழுத்தாளர்கள் சங்கமும் கேள்வி எழுப்ப, சர்க்கார் கதை தான் உருவாக்கிய சொந்த கதை என்றும் என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்வேன் எனவும் விடாப்பிடியாக இருக்கின்றாராம்.