Monday, 29 October 2018

விற்பனைக்கு வந்தாச்சு விஜயின் சர்கார் ட்ரெஸ்..! பிச்சு உதறும் தீபாவளி சேல்ஸ்

96-trisha-dress-sarkar-vijay-dress
திரைப்படங்களில் மக்களை கவரும் கதாபாத்திரங்களின் உடை, விற்பனையிலும் பட்டையை கிளப்பி விடுவது வழக்கம்.

உதாரணமாக சொல்லப்போனால் படையப்பா படத்தில் ரஜினி அணிந்திருந்த உடை, 90களின் குழந்தைகளிடம் மிகப் பிரபலம். அதனை வாங்க அப்பா அம்மாவிடம் அடம்பிடித்த தருணங்களும் பலருக்கு நினைவில் இருக்கலாம்.

சமீபத்தில் கூட, 96 படத்தில் நடிகை திரிஷா அணிந்து வந்த சுடிதாரானது விற்பனையில் பட்டையை கிளப்பி இருந்தது.


இந்நிலையில் அடுத்தகட்டமாக வருகிற தீபாவளிக்கு வெளிவர இருக்கும் சர்கார் திரைப்படத்தில், நடிகர் விஜய் அணிந்து நடித்திருக்கும் பச்சை, சிவப்பு நிற உடையானது விற்பனைக்கு வந்துள்ளது.

இதனை வாங்க நடிகர் விஜயின் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில்,  சர்கார் பட ரிலீஸின் முதல் நாள், முதல் காட்சி அன்று பல ரசிகர்களை இந்த உடையில் பார்க்கலாம் என்கின்றனர் துணிக்கடை உரிமையாளர்கள்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();