Breaking News

தீபாவளி அன்று காத்திருக்கும் "2.0" மெகா சர்ப்ரைஸ்


சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற நவம்பர் 29ம் தேதி ரிலீசாக இருக்கும் திரைப்படம் 2.0.

இந்தியாவில் உருவாகிய திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் தற்பொழுது கசிந்துள்ளது.

அதன் படி தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 3ம் தேதி, அத்திரைப்பட ட்ரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வெளியான அப்படத்தின் டீசர் எதிர்பார்த்த தாக்கத்தை ரசிகர்களை ஏற்படுத்தாத நிலையில்,  ட்ரைலர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொத்திக் கொண்டுள்ளது.