Friday, 14 September 2018

அபிமான நடிகர்களுக்காக 'கள்ள ஓட்டு' போடும் தமிழ் சினிமா ரசிகர்கள்..!


இந்த நவீன உலகில் உண்ணும் உணவை தவிர அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆகிவிட்டது. இதன் தாக்கத்தை நாம் தற்பொழுது சினிமா துறையிலும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

முன்பு டிவி, செய்தித்தாள் மற்றும் சுவர் ஒட்டிகள் மூலமாக மட்டுமே செயப்பட்டு வந்த திரைப்பட விளம்பரங்கள் இன்று பெரும்பாலும் சமூக வலைதளங்களில் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் சமூக வலைதளங்களில் நேரடியாகவே வெளியிடப்படுகிறது. அதனை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை வைத்து சாதனை பட்டியலையும் வெளியிடுகின்றனர் ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர்.

இந்த பட்டியலில் தங்களது அபிமான நட்சத்திரங்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் பலர், மென்பொருள்கள் உபயோகித்து குறிப்பிட்ட வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதாக தெரியவந்துள்ளது.

Add caption

இந்த வித மென்பொருட்களை உபயோகிக்கும் போது, யூட்யூப் போன்ற வீடியோ தளங்களில் ஒரு நபரே பல்லாயிரக் கணக்கான நபர்கள் பார்த்தற்கு இணையான எண்ணிக்கையை கொடுக்க முடியும். 

தெளிவாக கூற வேண்டும் என்றால் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை போல. இப்படி சமூக வலைதளங்களில் கெத்து காட்ட குறுக்கு வழியில் ரசிகர்கள் செய்யும் செயல்களை தவிர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது யூட்யூப் நிறுவனம்.

  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();