Breaking News

மதுரை ரசிகர்களுக்கு அஜித் கொடுக்க இருக்கும் சர்ப்ரைஸ் - ஆசம் விஸ்வாசம் அப்டேட்


சினிமா ரசிகர்களிலேயே மதுரை ரசிகர்கள் கொஞ்சம் தீவிரமானவர்கள். பிரமாண்ட போஸ்டர்கள், பேனர்கள், நல திட்ட உதவிகள் என அவரவர் பிரியமான நடிகர்களின் பட ரிலீஸ், பிறந்த நாள் போன்றவற்றை திருவிழா போல கொண்டாடி விடுவார்கள்.

அதிலும் குறிப்பாக நடிகர் அஜித்துக்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே அங்கு இருக்கிறது. இந்நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதத்தில் வெளியாகி இருக்கிறது விஸ்வாசம் திரைப்படத்தின் அப்டேட்.

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் இந்த விஸ்வாசம் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் அஜித். சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஒரு காதாப்பாத்திரத்தில் மதுரை மக்களின் பாணியில் பேசி நடித்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதனால் விஸ்வாசம் திரைப்படமானது, அவரது சிறு சிறு செய்கைகளையும் கொண்டாடும் தீவிர மதுரை அஜித் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.