Breaking News

நடிகராகும் விராட் கோலி...? சினிமாவிலும் செஞ்சுரி அடிப்பாரா..?


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தனது அதிரடியான பேட்டிங் மூலமும் தொடர்ச்சியான சதங்களின் மூலமும் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர்.

விளையாட்டில் மட்டுமல்லாது லுக்கிலும் ஹீரோவான அவர், திரைத்துறையிலும் ஹீரோவாக இருப்பது குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு ஒன்றில், சூப்பர் ஹீரோ பாணியில் தான் தோன்றியிருக்கும் புகைப்படத்தோடு, 'பத்து வருடங்களுக்கு பின் மீண்டுமொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
'ட்ரைலர் தி மூவி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 'WROGN ப்ரொடக்சன்' நிறுவனம் தயாரிக்க உள்ளது. வருகிற செப்டெம்பர் 29ம் தேதி வெளியீடு என குறிப்பிட்ட போஸ்டரில் இடம் பெற்று இருக்கும் நிலையில், உண்மையிலேயே இது திரைப்படம் குறித்த அறிவிப்புதானா அல்லது வேறேதாவது விளம்பர முயற்சியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.