Tuesday, 4 September 2018

ரிலீசுக்கு முன்பே விஸ்வாசத்தை தோற்கடித்த சர்க்கார்


விஜய், அஜித் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே எக்கச்சக்க வரவேற்பு இருந்தாலும், வசூல் அடிப்படையில் நடிகர் விஜயே தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார்.

அதற்குஅவர்களது சமீபத்திய படங்களின் வசூலே ஆதாரம். இப்படி இருக்க இன்னும் திரைக்கே வராத விஸ்வாசம், சர்கார் திரைப்படங்களுக்கான தியேட்டரிக்கல் ரைட்ஸ்ஸிலும் இதே நிலை தான் நிலவுகிறது.

சமீபத்திய தகவலின் படி விஸ்வாசம் மற்றும் சர்கார் திரைப்படங்களின் தியேட்டரிக்கல் உரிமையானது இப்பொழுதே விலை பேசப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.

அதன்படி விஸ்வாசம் திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கும், சர்கார் 65 கோடி ரூபாய்க்கும் விற்பனையாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
Disqus Comments
'