Breaking News

விரைவில் வெளியாகும் சர்கார் குறித்த அதிரடி அறிவுப்பு..? சஸ்பென்ஸ் வைத்த சன் பிக்சர்ஸ்


A.R. முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஸ்மி ஆகியோர் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் 'சர்கார்'. இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்நிலையில், அரசியல் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கும் சர்கார் குறித்த அதிரடி அறிவிப்பு தகவலை "சர்கார் கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

இது குறித்து அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவின் படி,  வருகிற செப்டம்பர் 19ம் தேதி காலை 11மணிக்கு, சர்கார் டீசர் அல்லது ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதனால் மிகுந்த ஆவலோடு அந்த அறிவிப்பு நோக்கி காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.