Saturday, 15 September 2018

தனது ரசிகர் கூட்டத்தால் ஏற்பட்ட சங்கடம்..! விஜய் செய்த நெகிழ்ச்சியான காரியம்

#PondyWelcomesTHALAPATHY

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகி, பிசி ஆனந்த் அவர்களது மகளின்  திருமண விழாவில் நேற்று கலந்து கொண்டார். பாண்டிச்சேரியில் நடைபெற்ற இந்த திருமண விழாவிற்கு வந்த விஜயை வரவேற்கும் விதத்தில் சாலையெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த வீடியோக்களும் சமீபத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை உடைய நடிகர்களில் ஒருவர் விஜய் என்பதால், அவரை காணும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திருமண மண்டபத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும்  கூட்டத்தை கட்டுப்படுத்த அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக ரசிகர்கள் அங்கு கூடிய காரணத்தினால், மணமக்கள் மேடை வரை நிற்க இடமில்லால் போனது. இதற்கிடையே விஜயும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தான் மணமக்களை தனது மனைவி சங்கீதாவுடன் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் தனது ரசிகர் கூட்டத்தால், மணமக்களின் இனிய நாளில் ஏற்பட்ட அசௌகரியத்தையும் உணர்ந்த நடிகர் விஜய், திட்டமிட்ட நேரம் வரை திருமண மண்டபத்தில் இருக்காமல் உடனே அங்கிருந்து புறப்பட்டார்.   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();