Breaking News

விஜய் அஜித்துக்கு கிடைக்காத அங்கீகாரத்தை பெற்ற எஸ்.கே..!

varuthapadaatha-valipar-sangam-comics

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எனப்படும் விஜய், அஜீத் ஆகியோரின் படங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். வெறும் 12 படங்களிலேயே முன்னனி நடிகர் என்ற இடத்தை பிடித்து, சக நடிகர்கள் பொறாமை படும் அளவிற்கு பிரமாண்டமானது இவரது வளர்ச்சி.

சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், விரைவில் காமிக்ஸ் வடிவில் புத்தகமாக வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் இப்படி காமிக்ஸ் வடிவில் வெளியாக இருப்பது இதுவே முதன் முறை எனும் நிலையில், இந்த தகவல் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

#varuthapadaatha-valipar-sangam-comics