Friday, 21 September 2018

நீண்ட எதிர்பார்புகளுக்கு பின் "உறியடி-2" - தயாரிக்கும் பிரபல நடிகர்


அறிமுக இயக்குனர் விஜயகுமார் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் உறியடி. ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த திரைப்படமும் சந்தித்து இருந்தாலும், அருமையான திரைக்கதை மற்றும் ஆக்சன் காட்சிகளால், ரசிகர்களின் பேராதரவை பைரசி இணையதளங்களின் வழியாக பெற்றது.

என்றாலும், உறியடி திரைப்படத்தினை ரிலீஸ் செய்வதற்குள் தான் பட்ட பெரும் கஷ்டங்களையும், அடைந்த நஷ்டத்தையும், இனிமேல் படங்கள் தயாரிக்க போவதில்லை என்ற மனநிலைக்கு வந்ததை பற்றியும் ஊடகங்களுக்கு விஜய குமார் பேட்டி அளித்திருந்தார்.

என்றாலும் அவரது திறமையையும் மேலும் இது போன்ற திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக ரசிகர்கள் அளித்த நம்பிக்கையும், உறியடி இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டிருக்கிறது.

விஜயகுமாரே மீண்டும் இயக்கி நடிக்க இருக்கும் இந்த உறியடி-2 திரைப்படத்தினை இம்முறை நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();