Sunday, 16 September 2018

கை கொடுக்காத சிக்ஸ் பேக்ஸ்.... கலக்கத்தில் காமெடி நடிகர்


தமிழ் சினிமாவில் சந்தானம், வடிவேலு ஆகியோரின் நாயகன் அவதாரத்திற்கு பிறகு ஏற்பட்ட காமெடியன்கள் பஞ்சத்தை தற்காலிகமாக போக்கி உச்சத்திற்கு சென்றவர் இந்த காமெடி நடிகர்.

என்னதான் இவர் ஒருபுறம் வளர்ந்தாலும், 'காமெடியா இது மொக்கைதான் போடுகிறார்' என விமர்சித்து வந்தனர் ஒரு தரப்பு ரசிகர்கள். என்றாலும், அவரது மார்கெட் மென்மேலும் வளர, ஒரு நாளுக்கு 5 லட்சம் வரை சம்பளம் பெற்றார் இந்த பரோட்டா பிரியர்.

இப்படி போட்டியே இல்லாமல் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்த இவரது சினிமா பயணத்தில், நாயகிகளுடன் டூயட் பாடும் அளவிற்கு ஒரு புதிய காமெடி நடிகர் விஸ்வரூபம் எடுத்து தடையாக அமைய, சுதாரித்த நடிகர் சடன் பிரேக் போட்டு சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வைக்கும் அளவிற்கு கடினமாக உழைத்து மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு வர முயற்சி செய்தார்.

அந்த கடின உழைப்பிற்கு ஒரு சில கிளாப்ஸ் கிடைத்தாலும், காமெடியில் ஜொலிக்காத காரணத்தினால் மேலும் டல்லடிக்க துவங்கியுள்ளது அவரது மார்கெட். இதனால் தயாரிப்பாளர்களை கவரும் புதிய முயற்சியாக நாள் சம்பளம் பேசுவதை தவிர்த்து மொத்த கூலிக்கு மாறி இருக்கிறாராம். 




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();