Breaking News

வெள்ளி திரையில் இடம் பிடித்த 'செந்தில் கணேஸின்' சின்ன மச்சான் பாடல்



பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர் செந்தில் கணேஷ். செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜ லக்ஸ்மி ஆகியோர் அந்த போட்டியில் மண்மணம் மாறாத கிராமிய பாடல்களை பாடி லட்சகணக்கான ரசிகர்களை பெற்றனர்.

அதிலும் குறிப்பாக இந்த தம்பதியின் 'சின்ன மச்சான்' பாடல் மிக மிக பிரபலம். இப்படி மக்களை கவர்ந்த இந்த பாடலானது, பிரபுதேவாவின் சார்லி சாப்லின்-2 திரைப்படத்தில் இடம்பிடித்திருக்கிறது.

சக்தி சிதம்பரம் அவர்களது இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின், சின்ன மச்சான் உருவாக்க வீடியோவானது சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஸ்மி தம்பதியினர் தங்களுக்கே உரிய பாணியில் சின்ன மச்சான் பாடலை பாடும் காட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது.