Breaking News

"பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு மூடர் கூடம் தான்" - வெளிப்படையாக விமர்சித்த இயக்குனர்


தமிழகத்தில் பரவலாக பேசப்படும் விசயங்களில் பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியும் அடக்கம். இந்த நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே எக்கச்சக்க வரவேற்பு இருந்தாலும், ஒரு தரப்பினரிடையே எதிர்ப்பும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி இருக்க மக்களை கவர்ந்த வெற்றிப் படமான, மூடர் கூடத்தை இயக்கிய நவீனும் அந்நிகழ்ச்சிக்கு எதிராக தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

சென்ற வாரம் எவரும் எதிர்பாராத விதத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டார். அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து  இயக்குனர் நவீன், "வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இவரது கருத்துக்கு ஒரு புறம் ஆதரவு குவிந்தாலும், பிக்பாஸ் ரசிகர்கள் இயக்குனர் நவீனை தங்களது விமர்சனங்களால் தாக்கி வருகின்றனர்.